\
உ.பி.யில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

உ.பி.யில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

உ.பி.யில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
Published on

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மெயின்பூரி சேர்ந்த சிறுமியை மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவிக்க இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக அந்த நபர்கள் சிறுமிக்கு தொந்தரவு அளித்து வந்ததாக பெற்றோர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மெயின்பூரி காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் லக்னோவில் 15 வயது சிறுமியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28ஆம் தேதி ரத்தன்புரி மாவட்டத்தில் வீட்டில் இருந்த 13 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக பெற்றோர்கள் அளித்த புகாரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அம்மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com