பழங்குடி சிறுமிக்கு நேர்ந்த அவலம் - 12 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

பழங்குடி சிறுமிக்கு நேர்ந்த அவலம் - 12 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

பழங்குடி சிறுமிக்கு நேர்ந்த அவலம் - 12 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
Published on

காணாமல் போன 16 வயது பழங்குடியின சிறுமியை 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் ஏராளமான பாலியன் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒரு பக்கம் எழுந்தாலும், குற்றம் குறைவதாகத் தெரியவில் லை. கொல்கத்தாவில் பழங்குடி இனத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை, 12 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவ ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ளது மஹுலாரா கிராமம். இங்கு பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் வசித்துவருகிறார்கள். இங்குள்ள 16 வயது சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை வெளியே சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற் றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசாரும் ஊர்க்காரர்களும் அவரை தேடினர். இந்நிலையில் அங்குள்ள கால்வாய் ஒன்றில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் நிர்வாணமாக நேற்று கிடந்துள்ளார். உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன. போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. 

அந்தச் சிறுமியை 12 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கால்வாயின் அருகில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. காரியம் முடிந்ததும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஆறுபேரை கைது செய்துள்ளனர். 

இதே மாவட்டத்தில் வேறு சாதியை சேர்ந்தவரை காதலித்த பெண்ணுக்கு தண்டனையாக , 13 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பானது. 2014-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com