\
விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்கப்பட்டது 'யோகா'

விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்கப்பட்டது 'யோகா'

விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்கப்பட்டது 'யோகா'
Published on

விளையாட்டு போட்டியாக யோகா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் கேலோ இந்தியா, தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார்

யோகாவை ஊக்குவிக்கவும், அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். மேலும் யோகாசனம் விளையாட்டு உலகத்திற்கு கிடைத்த பரிசு என்றும் அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com