அமலாக்கத்துறையால் இதற்கு முன் கைது செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் யார் யார்?

பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

2019 ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதே 2019-ம் ஆண்டு தற்போதைய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரில் கைது செய்யப்பட்டார்.

ED office
ED officept desk

இதையடுத்து 2022 ஆம் ஆண்டு ஹவாலா பணமோசடி தொடர்பாக டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார்.

2022-ல் மேற்கு வங்கம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார்.

அதேபோல் பள்ளிகல்வித் துறையில் நியமன முறைகேடு என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுதொடர்பான விசாரணை வளையத்திற்குள் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி இருக்கிறார். இதையடுத்து மகாராஷ்டிரா, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.

2023 இந்த ஆண்டு புதிய மதுபான கொள்கையில் முறைகேடு புகார் எழுந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இது தொடர்பான அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா இருக்கிறார். அமலாக்கத் துறையின் விசாரணையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் இருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com