சபரிமலைக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

சபரிமலைக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

சபரிமலைக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
Published on

அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வசதியாக இன்று முதல் தமிழ்நாட்டிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களுக்கு தமிழ்நாட்டு பக்தர்கள் சென்று வர வழக்கமாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 64 சிறப்புப் பேருந்துகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று முதல் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூரிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com