அமைச்சர் பெயரில் சமூகவலைதள கணக்கு தொடங்கியவர் கைது

அமைச்சர் பெயரில் சமூகவலைதள கணக்கு தொடங்கியவர் கைது

அமைச்சர் பெயரில் சமூகவலைதள கணக்கு தொடங்கியவர் கைது
Published on

மகராஷ்ட்ரா மாநில அமைச்சர் பெயரில் போலி சமூகவலைதள கணக்கு தொடங்கி, அதில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டவரை புனே நகர போலீசார் கைது செய்தனர். 

புனேவை அடுத்த ஜன்னர்டேசில் பகுதியைச் சேர்ந்த ருதுராஜ் நலவாலே என்பவர், மகராஷ்டிரா மாநில உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் கிரிஷ் பபத்-தின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கைத் தொடங்கினார். அதில், ஆபசமான புகைப்படங்களை அவர் பதிவிட்டதாக எழுந்த புகாரையடுத்து புனே சைபர் கிரைம் போலீசார் ருதுராஜைக் கைது செய்தனர். இதுதொடர்பாக அமைச்சரின் சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கும், சுனில் மானே என்பவர் அளித்த புகாரை அடுத்து, போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஃபேஸ்புக்கில் அமைச்சரின் பெயரில் போலி கணக்குகளைத் தொடங்கி, அவதூறு கருத்துகளைப் பரப்பி வந்ததாக மானே குற்றம்சாட்டியுள்ளார்.     

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com