பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்
பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2020-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 18லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்தை அறிவித்தார். இந்த நிலையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திருமண வயது உயர்வு தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க நிதி ஆயோக் சிறப்புக் குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அக்குழுவில் அரசுத்துறை நிபுணர் வி.கே.பால், சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள், மகளிர் மற்றும் சிறார் வளர்ச்சித் துறை அதிகாரிகள், சட்டத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் இடம் பெற்றனர்.
இந்தக் குழு தனது பரிந்துரைகளை கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கியது. அதில் 21 வயதில் திருமணம் நடந்தால்தான் பெண்களால் ஆரோக்கியமான முறையில் கர்ப்பம் தரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று தற்போது 21 வயதாக திருமண வயதை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் படியாக அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறார் திருமண சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com