சிறிய ரக விமானம் விபத்து : 5 பேர் பலி

சிறிய ரக விமானம் விபத்து : 5 பேர் பலி

சிறிய ரக விமானம் விபத்து : 5 பேர் பலி
Published on

மும்பையில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 

மும்பை காட்கோபர் பகுதியில் விமானம் தரையிறங்க முற்படும் போது இவ்விபத்து ஏற்பட்டது. விமானம் விழுந்தவுடன் தீப்பற்றி எரிந்து அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

விபத்துக்குள்ளான விமானம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்றும், அதை உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து அந்நிறுவனம் வாங்கியதாகவும் தெரிகிறது. இதற்கிடையில் விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரக குழு விரைந்துள்ளதாக அந்த அமைப்பின் இயக்குநர் பி.எஸ்.புல்லர் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com