சிவிங்கிப் புலிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்? - போட்டியில் குவியும் பெயர்கள்!

சிவிங்கிப் புலிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்? - போட்டியில் குவியும் பெயர்கள்!
சிவிங்கிப் புலிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்? - போட்டியில் குவியும் பெயர்கள்!

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் சிவிங்கிப் புலிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற போட்டி MyGov இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.

நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் சிவிங்கிப் புலிகளுக்கு இந்தியப் பாரம்பரிய முறையில் பெயர் சூட்ட வேண்டும் என்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சிவிங்கிப் புலிகள் ஒவ்வொன்றும் எந்த பெயரில் அழைக்கப்பட வேண்டும்? சிவிங்கிப் புலிகளைப் பாதுகாக்கும் திட்டத்திற்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? என்று MyGov இணையதளத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிவிங்கிப் புலிகளை பார்க்கும் முதல் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்று  MyGov இணையதளத்தில் பலரும் சிவிங்கிப் புலிகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற தங்களது யோசனைகளை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை அந்த இணையதளத்தில் வீர், ப்னாகி, பைரவ், பிரம்மா, ருத்ரா, துர்கா, கௌரி, பத்ரா, சக்தி, பிரஹஸ்பதி, சின்மயி, சதுர், வீரா, ரக்ஷா, மேதா, மயூர் என 750க்கும் மேற்பட்ட பெயர்கள் சமர்பிக்கப்பட்டிருக்கிறது. சிவிங்கிப் புலிகளைப் பாதுகாக்கும் திட்டத்திற்காக 'குனோ கா குந்தன்', 'மிஷன் சித்ரக்', 'சிராயு', 'சிட்வால்' என 800க்கும் மேற்பட்ட பெயர்கள் சமர்பிக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க  அக்டோபர் 26ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1950களுக்குப் பின்னர் இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்ட நிலையில், தற்போது சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் அவை இந்தியக் காடுகளுக்கு வருகை தந்திருக்கின்றன. 5 பெண் சிவிங்கிகள், 3 ஆண் சிவிங்கிகள் என மொத்தம் 8 சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த சிவிங்கிப் புலிகளை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ம் தேதி தனது பிறந்த நாள் அன்று திறந்துவிட்டார்.

இதையும் படிக்க: போர்க்கைதியின் நிலை!! வைரலாகும் ரஷ்யாவிடமிருந்து தப்பித்து வந்த உக்ரைன் வீரரின் போட்டோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com