
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற அச்சத்தால் குஜராத்தில் உள்ள வேறு மாநில தொழிலாளர்கள் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்
கொரோனா அச்சத்தால் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். வரும் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடியும் நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்கக்கோரி வலியுறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நேற்று வன்முறையில் ஈடுபட்டனர். சாலைகளை மறித்தும் கற்களை வீசியும் தொழிலாளர்கள் பலர் வன்முறை செய்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இது குறித்து தெரிவித்த சூரத்தின் காவல் துணை ஆணையர் ராகேஷ், ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற அச்சத்திலும் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரியும் பலர் வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.