\
midnight matrika puja for bail in chhattisgarh
midnight matrika puja for bail in chhattisgarhai

ஜாமீன் பெற நீதிபதி படத்துடன் சுடுகாட்டில் மாந்திரீகம்.. சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!

சத்தீஸ்கரில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற நீதிபதி புகைப்படத்துடன் சுடுகாட்டில் மாந்திரீகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

சத்தீஸ்கர் பிலாஸ்பூர் அருகே தேவ்ரி கிராம சுடுகாட்டில், உறவினருக்கு ஜாமீன் பெற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா புகைப்படத்துடன் நள்ளிரவில் மாந்திரீகம் செய்த நபர் கிராமத்தினரால் பிடிபட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்ட உறவினருக்காக மாந்திரீகம் செய்ததாக கூறிய அவர் வசம் எலுமிச்சை, குங்குமம், நீதிபதி புகைப்படம் பறிமுதல் செய்யப்பட்டது.

சத்தீஸ்கரில் உறவினருக்கு ஜாமீன் பெற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் புகைப்படத்துடன் சுடுகாட்டில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிலாஸ்பூர் அருகே தேவ்ரி கிராம சுடுகாட்டில் நள்ளிரவில் ​​சிலர் மாந்திரீகத்தில் ஈடுபட்டதை அறிந்த கிராமத்தினர் அவர்களிடம் விசாரித்தபோது தப்பி ஓடினர். பிடிபட்ட நபரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்ட தனது உறவினருக்கு ஜாமீன் பெற மாந்திரீகம் செய்ததாக கூறியுள்ளார். சுடுகாட்டில் எலுமிச்சம்பழம், குங்குமம் மற்றும் சத்தீஸ்கர் தலைமை நீதிபதி ரமேஷ்சின்ஹா புகைப்படம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

midnight matrika puja for bail in chhattisgarh
ஹரியானாவில் ஒரே வீட்டில் 2ஆவது முறையாக கொள்ளை.! பறிபோன ரூ.3.15 கோடி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com