\
நடுவானில் விமானப்படை விமானங்கள் மோதல்!

நடுவானில் விமானப்படை விமானங்கள் மோதல்!

நடுவானில் விமானப்படை விமானங்கள் மோதல்!
Published on

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் ஒரு விமானி படுகாயமடைந்தார்.

பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்குகிறது. வரும் 24-ஆம் தேதி இந்தக் கண்காட்சி நடக்கிறது.  இங்கு விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடக்கும். இதற்கான ஒத்திகையில், இந்திய விமானப்படைக்கு சொந் தமான சூரியகிரண் பிரிவைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் இன்று ஈடுபட்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதைய டுத்து விமானங்கள் தரையில் விழுந்து தீ பிடித்து எரிந்தன. 

விமானிகள் இருவரும் குதித்து தப்பிவிட்டனர். இதில் ஒரு விமானி பலத்த காயம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிகிறது. இதில் பொதுமக்களில் 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com