இந்தியா
கதவு திறக்காததால் மெட்ரோ ரயிலில் சிக்கிய பயணிகள்
கதவு திறக்காததால் மெட்ரோ ரயிலில் சிக்கிய பயணிகள்
கொல்கத்தாவில் மெட்ரோ ரயிலின் கதவுகள் திறக்காததால் பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
கொல்கத்தாவின் டும் டும் என்ற இடத்தில் இருந்து இன்று காலையில் மெட்ரோ ரயில் புறப்படு வந்தது. சாகித் குதிராம் என்ற ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும் ரயிலுக்குள் இருந்த பயணிகள் வெளியேறவும் வெளியே இருந்த பயணிகள் ரயிலில் ஏற முயன்றனர். ஆனால், ரயில் கதவுகள் திறக்கவில்லை. தானியங்கிக் கதவுகள் பூட்டிக்கொண்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.
இதையடுத்து ரயில்வே அதிகாரிகள், போலீசார், தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைவாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராடி கதவை சரி செய்தனர். இதன் பிறகு பயணிகள் வெளியே வந்தனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.