”டோக்கன் இல்லை, பணப்பரிவர்த்தனை இல்லை” : டெல்லி மெட்ரோவின் வழிகாட்டு நெறிமுறைகள்

”டோக்கன் இல்லை, பணப்பரிவர்த்தனை இல்லை” : டெல்லி மெட்ரோவின் வழிகாட்டு நெறிமுறைகள்

”டோக்கன் இல்லை, பணப்பரிவர்த்தனை இல்லை” : டெல்லி மெட்ரோவின் வழிகாட்டு நெறிமுறைகள்
Published on

கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தியது மத்திய அரசு. 

தற்போது படிப்படியாக ஊரடங்கு நடைமுறைகளுக்கு தளர்வுகள் அமல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளின்படி மெட்ரோ ரயில் சேவையை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

இருப்பினும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது டெல்லி மெட்ரோ. 

மெட்ரோ ஸ்டேஷனில் டோக்கன்கள் வழங்கப்படாது, ரொக்க பண பரிவர்த்தனைகளை தவிர்த்து முழுவதும் டிஜிட்டல் பண  பரிவர்த்தனையை பயணிகள் பின்பற்ற  வேண்டுமென  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல மெட்ரோ ஸ்டேஷனுக்குள் வருகை தரும் ஒவ்வொரு பயணியையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பத்தை பரிசோதித்த பின்னரே பரிசோதிக்கப்படுவர் எனவும், பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது, பயணிகளுக்கு இடையே சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் எனவும் கடந்த மே மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த மெட்ரொ சேவை மருத்துவக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. 

https://twitter.com/ArvindKejriwal/status/1299718614728073216

அதை பின்பற்றி வரும் 7ஆம் தேதி முதல் டில்லி அரசு முதற்கட்டமாக அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே மெட்ரோ சேவையை ஆரம்பிக்க உள்ளது. 

நொய்டாவில் அக்வா ரயில் லைனில் மெட்ரோ சேவையை பொது மக்களுக்காக ஆரம்பிக்க உள்ளதாக நொய்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com