\
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு

கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு

கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் 'மெட்ரோ மேன்' என்று பிரபலமாக அறியப்பட்ட இ.ஸ்ரீதரன், சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். எதிர்வரும் கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவும் களமிறங்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அரசியல் என்ட்ரி குறித்து பேசிய ஸ்ரீதரன் ,"ஆளுநராக வேண்டும் என்று கட்சியில் சேரவில்லை. அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டாலும் ஆளுநராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் முதல்வர் பதவி குறித்து கட்சி முடிவு செய்ய வேண்டும். நான் முதல்வர் முகமாக திட்டமிடப்பட்டால், கேரளாவின் இரு முனைகளிலும் மகிழ்ச்சியற்ற ஒரு பெரிய குழு நிச்சயமாக எங்களுடன் வரும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெரிய புரட்சி இருக்கும் என்றும் நான் நினைக்கிறேன். அதனுடன், பாஜகவுக்கு போதுமான எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படியே தற்போது அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com