\
உத்தராகண்ட் - 13 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

உத்தராகண்ட் - 13 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

உத்தராகண்ட் - 13 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
Published on

உத்ராகண்ட் மாநிலத்தில் 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்ராகண்ட் மாநிலத்தில் ஏற்கனவே கனமழை பெய்துவரும் நிலையில், ஹரித்துவார், உத்தம்சிங் நகர், உத்தரகாசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீச வாய்ப்புள்ளதாகவும், உத்தரகாசி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பத்ரிநாத் யாத்திரையும், மலையேற்றம் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனமழையை அடுத்து உத்ராகண்ட் மாநிலத்தில் பெரும்பாலான கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com