\
ராஜஸ்தான்: வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்!!

ராஜஸ்தான்: வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்!!

ராஜஸ்தான்: வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள்!!
Published on

ராஜஸ்தானில் வானில் இருந்து மர்மப் பொருள் ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோர் பகுதியில் விண்கல் போன்ற ஒன்று வானில் இருந்து விழுந்துள்ளது. பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலியுடன் அந்த பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அந்த பொருள் விழுந்த இடத்தில் அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது என்றும், அதன் சத்தம் 2கிமீ சுற்றளவிற்கு கேட்டதாகவும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த பொருள் விழுந்தது முதல் வெப்பமாக இருந்ததாகவும், அதன் வெப்பம் தணிந்த பின்னரே போலீசார் அதனை மீட்டு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்தப்பொருள் சுமார் 2.78 கிலோ எடை கொண்டது என போலீசார் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள நகைக்கடைக்கு சொந்தமான ஆய்வகத்தில் செய்யப்பட்ட முதற்கட்ட சோதனையில் அந்த கல்லில் ஜெர்மானியம், பிளாட்டினியம், நிக்கல் மற்றும் இரும்பு அடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட சோதனைக்காக அந்த பொருளை ஜெய்பூரில் உள்ள புவியியல் தொடர்பான ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com