'சூப்பர்' பயன்பாட்டை மூடுகிறது மெட்டா.. ஆனாலும் பிப்ரவரி 15 வரை?

'சூப்பர்' பயன்பாட்டை மூடுகிறது மெட்டா.. ஆனாலும் பிப்ரவரி 15 வரை?
'சூப்பர்' பயன்பாட்டை மூடுகிறது மெட்டா.. ஆனாலும் பிப்ரவரி 15 வரை?
Published on

‘Super’ செயலி என்பது 2020 இல் மெட்டாவால் உருவாக்கப்பட்ட லைவ் ஸ்ட்ரீமிங் தளமாகும். மெட்டா அதன் கேமியோ போன்ற 'சூப்பர்' செயலியின் பயன்பாட்டை வரும் பிப்ரவரி 2023-ல் மூடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில், இந்த முயற்சியைத் தொடங்கிக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மெட்டா அதன் இணைப்புப் பிரிவை மூடியது.

Facebook என்று அழைக்கப்பட்ட நிறுவனம் தற்போது Meta என்று அழைக்கப்படுகிறது. உலகளவில் முதன்மையான நான்கு மொபைல் பயன்பாடுகளை வைத்திருக்கிறது இந்நிறுவனம். அதில் Facebook, Messenger, Facebook Watch மற்றும் Meta Portal ஆகியவை அடங்கும். meta என்பது ஒரு மெய் நிகர் உலகம், இது நமது உலகின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

VidCon அல்லது Comic-Con போன்ற நிஜ வாழ்க்கை நிகழ்வில் பயனர்கள் அனுபவிப்பதைப் போன்ற ஒரு மெய் நிகர் சந்திப்பு அனுபவத்தை உருவாக்க நம்புவதாக நிறுவனம் கூறியதாக TechCrunch தெரிவித்துள்ளது.

சூப்பர் செயலியை மூடப்போவதாக அறிவித்தாலும் பிப்ரவரி வரை 'சூப்பர்' அதிகாரப்பூர்வமாக மூடப்படாது என்றும் பயனர்கள் இந்த நேரத்தில் புதிய நிகழ்வுகளை உருவாக்கலாம் என்றும் meta நிறுவனம் அறிவித்துள்ளது.

சூப்பர் என்பது லைவ் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ் மட்டுமல்ல, பலர் நேரலைக்குச் சென்று வருவாய் ஈட்டக்கூடிய பல செயலிகள் உள்ளன. பிப்ரவரி வரை Super முறையாக மூடப்படாது என்றாலும், இந்த நேரத்தில் பயனர்கள் புதிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், மெட்டா ஏற்கனவே நிறுத்தப்பட்ட திட்டப்பணிகள் மற்றும் பயன்பாடுகளின் நீண்ட வரிசையில் Super இணைகிறது.

- அருணா ஆறுச்சாமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com