மேகதாது அணை விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த எடியூரப்பா

மேகதாது அணை விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த எடியூரப்பா

மேகதாது அணை விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த எடியூரப்பா
Published on

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே பிரச்னை நீடிக்கும் நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துள்ளார்.

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் தொடர்பான விழாவில் பங்கேற்க பெங்களூருவுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வருகை தந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவரை நேரில் சந்தித்தார். கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் , நீர்ப்பாசன துறை அமைச்சர் ஜெ.சி.மதுசுவாமி, தலைமை செயலாளர் ரவிக்குமார் , நீர்வளத்துறை இணை செயலாளர் ராகேஷ் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அப்போது மேகதாது அணை விவகாரம் குறித்து விரிவாக ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேகதாது அணை விவகாரத்தால் இரு மாநிலங்கள் இடையே பிரச்னை நீடிக்கும் சூழலில் மத்திய அமைச்சர் உடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com