\
மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா?

மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா?

மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா?
Published on

மேகாலயா ஆளுநராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் ராஜினாமா செய‌திருப்பதாக, பி.டி.ஜ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டதை அடுத்து இம்முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக மேகாலயா ஆளுநரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது. அம்மாநில ஆளுநராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வி.சண்முகநாதன் மீது புகார் தெரிவித்து, ஆளுநர் மாளிகையில் பணிபுரிபவர்களே குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த சூழ்நிலையில், அவரை உடனடியாக ஆளுநர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியிருந்தது. நாட்டிற்கே இது அதிர்ச்சியானதாக இருப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்வதற்கு இதுவே சரியான தருணம் என்றும் பிரதமரை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com