இந்திய விமானப்படையின் புதிய நம்பிக்கையாக இணைந்திருக்கும் ரஃபேல்தான் பற்றித்தான் இப்போது அனைவரின் பேச்சும் உள்ளது. அத்தகைய ரஃபேலை பிரான்ஸில் இருந்து இந்தியாவுக்கு இயக்கி வந்த விமானிகளின் உத்வேக வரலாறை பார்ப்போம்.
பிரான்ஸிலிருந்து ஏழு விமானிகளுடன் புறப்பட்ட ரஃபேல் இந்தியாவிலுள்ள அம்பாலாவில் தரையிறங்கியபோது விமானப்படையின் தளபதி ஆர்.கே.எஸ் படோரியா அவர்களை பெருமிதத்துடன் வரவேற்றார்.
குரூப் கேப்டன் ஹர்கிரத் சிங்:
2008 ஆம் ஆண்டு எம்.ஐ.ஜி 21 என்ற விமானத்தை இவர் இயக்கியபோது பெரும்விபத்து ஏற்பட்டது, அப்போது மிகவும் துணிச்சலுடன் மக்களின் உயிரை காப்பாற்றியதால் இவருக்கு உயரிய விருதான செளரிய சக்கரா வழங்கப்பட்டது. இவர் 2001 ஆம் ஆண்டில் பணிக்கு இணைந்தவர். இவருடைய தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவியும் விமானப்படையில் பணியாற்றுகிறார்.
விங் கமாண்டர் அபிசேக் திரிபாதி:
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜலாவூர் என்ற சிறு நகரத்தை சேர்ந்த இவர். சிறுவயதில் குத்துசண்டை வீரராக இருந்தவர். 1984 ஆம் ஆண்டு பிறந்த இவரின் தந்தை வங்கி ஊழியர், தாய் விற்பனை வரி துறையில் பணியாற்றுபவர்.
விங் கமாண்டர் மணீஷ் சிங்:
உத்தரபிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்திலுள்ள பக்வா என்ற சிறு கிராமத்தை சேர்ந்தவர் இவர். இவரது குடும்பத்தை சேர்ந்த பலரும் விமானப்படையில் பணியாற்றுபவர்கள். இவர் 2003 ஆம் ஆண்டில் பணிக்கு சேர்ந்தவர்.
குரூப் கேப்டன் ரோஹித் கட்டாரியா:
இவர் ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்திலுள்ள பசாய் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ராணுவ அதிகாரியாக இருந்தவர். பணி ஓய்வுக்கு பிறகு இவரின் தந்தை சைனிக் பள்ளியின் முதல்வராக உள்ளார். இவரது சாதனை இப்போது ரோஹித்தின் கிராமத்தை சேர்ந்த பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக கிராமமக்கள் சொல்கின்றனர். இந்த கதைகள் அனைத்தும் இன்றைய தலைமுறைக்கு நிச்சயமாக தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கக்கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை.