சொந்த ஊருக்கு வந்தது உக்ரைனில் கொல்லப்பட்ட மாணவர் நவீனின் உடல்; முதல்வர் மரியாதை

சொந்த ஊருக்கு வந்தது உக்ரைனில் கொல்லப்பட்ட மாணவர் நவீனின் உடல்; முதல்வர் மரியாதை

சொந்த ஊருக்கு வந்தது உக்ரைனில் கொல்லப்பட்ட மாணவர் நவீனின் உடல்; முதல்வர் மரியாதை
Published on

உக்ரைனில் உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவரின் உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

உக்ரைனில் கடந்த ஒன்றாம் தேதி, கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழந்தார். போர் சூழலால் நவீனின் உடலை உடனே இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சியால் அவரது உடல், விமானம் மூலம் வரும் இன்று அதிகாலை பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் மாணவர் நவீன் உடலுக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் நவீனின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்றும் அதன்பின்னர் நவீனின் உடல் தாவண்கெரே எஸ்.எஸ். மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்திற்கு மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் என்றும் அவரது தந்தை ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com