மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லை: தரையில் இழுத்துச் செல்லப்பட்ட நோயாளி
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியை பெட்ஷீட்டில் படுக்கவைத்து தரையில் இழுத்த சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் நேதாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளியை எக்ஸ்ரே எடுக்க மருத்துவமனை ஊழியர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
நடக்க முடியாத நிலையில் இருந்த அந்த நோயாளியை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் செல்லாமல் பெட்ஷீட்டில் படுக்கவைத்து தரதரவென மருத்துவமனை ஊழியர் இழுத்துச் சென்றுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய மருத்துவக் கல்லூரியின் டீன், நவ்னீத் சக்சேனா, நோயாளியை தரையில் இழுத்த சென்ற விவகாரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.