\
மாட்டு இறைச்சிக்குத் தடை... திருமணங்களில் சைவ உணவு

மாட்டு இறைச்சிக்குத் தடை... திருமணங்களில் சைவ உணவு

மாட்டு இறைச்சிக்குத் தடை... திருமணங்களில் சைவ உணவு
Published on: 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருமண நிகழ்வுகளில் சைவ உணவுகளை பரிமாறுகின்றனர்.

மொராதாபாத்தில் இஸ்லாமியர்கள் பலருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. பொதுவாக இது போன்ற திருமணங்களில் அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஆனால் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முறைகேடாக செயல்பட்ட மிருக வதை கூடங்கள் மற்றும் மாட்டு இறைச்சி பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளதால் இந்த திருமணத்தில் சைவ உணவு பரிமாறப்பட்டது. முன்னதாக, தங்கள் இல்ல திருமணத்தில் மாட்டு இறைச்சி பரிமாற அனுமதிக்குமாறு ஒரு குடும்பம் காவல்துறையினரிடம் அனுமதி கோரியது. அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை சிக்கன் பரிமாறலாம் என அனுமதி அளித்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com