மத்தியப் பிரதேசத்தில் அதிகரிக்கும் தட்டம்மை - ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் அதிகரிக்கும் தட்டம்மை - ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழப்பு
மத்தியப் பிரதேசத்தில் அதிகரிக்கும் தட்டம்மை - ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழப்பு

மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 135 பேருக்கு தட்டம்மை தொற்று பதிவாகியுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் தட்டம்மை வேகமாக பரவிவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜபால்புர், நர்சிங்க்புர், புரான்புர் மற்றும் இந்தூரில் 135 பேருக்கு தட்டம்மை தொற்று பரவியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த 4 மாவட்டங்கள்தான் தொற்றின் மையமாக இருப்பதாகவும், குறிப்பாக ஜபால்புர் மற்றும் இந்தூரில் 2 பேர் தட்டம்மை தொற்றால் உயிரிழந்துள்ளனர் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாக நேஷனல் ஹெல்த் மிஷனின் இயக்குநர் டாக்டர் சந்தோஷ் சுக்லா தெரிவித்துள்ளார். தொற்று ஏற்பட்டால், குறிப்பாக குழந்தைகளுக்கு தொற்று உறுதியானால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது என்கிறார்.

மாநிலத்தின் சில பகுதிகளில், பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் தேர்வுகள் எழுதக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முகவரி மற்றும் விவரங்களை அந்தந்த பள்ளிகளே சுகாதாரத்துறைக்கு அனுப்பியிருக்கிறது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குருத்வாரா, கோயில்கள் மற்றும் மசூதிகளிலிருந்தும் தட்டம்மை குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அறிகுறிகள் தென்பட்டவுடனே உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி மருத்துவரை அணுகாத பட்சத்தில் குழந்தைகளுக்கு மேலும் பலவீனம் ஏற்படுவதுடன், சிரமங்களும் அதிகரிக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com