பத்திரிகையாளர் கொலை வழக்கு - சோட்டா ராஜன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை
பத்திரிகையாளர் ஜே டே கொலை வழக்கில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ராஜன் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றம் தொடர்பான செய்திகளை சேகரிக்கும்
பத்திரிகையாளரான ஜே டே என்னும் ஜோதிர்மோய் டே கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 11 ம் தேதி மும்பையின் பொவாய்
பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. தன்னைப்பற்றி பத்திரிகைகளில் விரிவாக எழுதியதால் கோபமடைந்த சோட்டா
ராஜன் ஜே டே-வை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. சோட்டா ராஜன் குறித்து விரிவான புத்தகம் ஒன்றையும் எழுத ஜே டே
திட்டமிட்டிருந்தார். இந்த வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என்று காலையில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவர் உள்ளிட்ட 7 பேருக்கு
ஆயுள் தண்டனை விதித்து மாலை 4.30 மணிக்கு உத்தரவிட்டுள்ளது.