அறிவிப்பில் தாமதம்: குறைகிறதா தேர்தல்கால நடத்தை விதிகளின் காலவரம்பு?

அறிவிப்பில் தாமதம்: குறைகிறதா தேர்தல்கால நடத்தை விதிகளின் காலவரம்பு?

அறிவிப்பில் தாமதம்: குறைகிறதா தேர்தல்கால நடத்தை விதிகளின் காலவரம்பு?
Published on

இந்த நாடாளுமன்றத் தேர்தல்தான் தேர்தல் கால நடத்தை விதிமுறைகளின் காலவரம்பு மிகக் குறைந்த நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும் எனத் தெரிய வருகிறது. 

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் இந்தியாவிலுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் Model code of conduct எனப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இதனால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். 

இதை மீறனால் அது குற்றமாகும். இந்த நடத்தை விதிமுறைகள் தேர்தல் முழுவதுமாக நடந்து முடியும் வரை அமலில் இருக்கும். இந்தாண்டு தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகததால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இதுவரை அமலுக்கு வரவில்லை. 

ஆகவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தாண்டுதான் மிகவும் குறைந்த நாட்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. ஏனென்றால் இன்னும் மூன்று மாதங்களில் மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் தேர்தல் அறிவிப்பு இனிமேல் வந்தாலும் அது கடந்த காலங்களைவிட மிகவும் குறைவான நாட்களுக்கே இருக்கும். 

இந்நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எவ்வளவு நாட்கள் அமலில் இருந்தன என்பது குறித்து பார்ப்போம்.

நாடாளுமன்றத் தேர்தல்             தேர்தல் தேதி                           தேர்தல் அறிவிப்பு வெளியான தேதி
     1999                                        செப்டம்பர் 5, அக்டோபர் 3                       மே 4
     2004                                         ஏப்ரல் 20-மே 10                                       பிப்ரவரி 29
     2009                                         ஏப்ரல் 20-மே 10                                        மார்ச் 2
     2014                                         ஏப்ரல் 7-மே 12                                          மார்ச் 5

முந்தைய தரவுகளை வைத்து பார்க்கும் போது வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில்தான் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காலவரம்பு மிகக் குறைவான நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com