“காங்கிரஸ் கட்சி கருணை காட்டத் தேவையில்லை” - மாயாவதி காட்டம்

“காங்கிரஸ் கட்சி கருணை காட்டத் தேவையில்லை” - மாயாவதி காட்டம்
“காங்கிரஸ் கட்சி கருணை காட்டத் தேவையில்லை” - மாயாவதி காட்டம்

காங்கிரஸ் கட்சி விரும்பினால் உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் போட்டியிட்டுக் கொள்ளட்டும் என்றும் 7 தொகுதிகளை ஒதுக்கி தங்களுக்கு கருணை காட்டத் தேவையில்லை என்றும் மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தமாக 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் அகிலேஷ் யாதவ்- மாயாவதி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு 37 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 38 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கூட்டணிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தியும் போட்டியிடுகின்றனர். இதனால் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என அகிலேஷ் யாதவ்- மாயவாதி கூட்டணி அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து உ.பி.யில் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்காக 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ் பாபர் தெரிவித்திருந்தார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் மைன்புரி தொகுதி, அகிலேஷ் யாதவின் மனைவியான டிம்பிள் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதி, ராஜ்ட்ரீய லோக் தள் கட்சியில் அஜித் சிங், ஜெயந்த் சௌத்திரி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் மாயவாதி போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்ட 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என ராஜ் பாபர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அதிருப்தியடைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உத்தப் பிரதேசத்தில் தனித்தே ஜெயிக்கும் வல்லமை மகா கூட்டணிக்கு உள்ளதாகவும் காங்கிரசின் தயவு தங்களுக்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com