பாஜக 'பி டீம்' னு சொன்னீங்களே என்ன நடந்துச்சு? - மாயாவதி விளக்கம்

பாஜக 'பி டீம்' னு சொன்னீங்களே என்ன நடந்துச்சு? - மாயாவதி விளக்கம்
பாஜக 'பி டீம்' னு சொன்னீங்களே என்ன நடந்துச்சு? - மாயாவதி விளக்கம்

உத்தரப்பிரதேச தேர்தலில், பகுஜன் சமாஜ் குறித்த எதிர்மறை பரப்புரைக்கு வெற்றி கிடைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத் தேர்தலில் பகுஜன் சமாஜ் மிகமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளில் ஓர் இடத்தில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, வெற்றி பெற முயற்சிப்பதற்கு ஒரு பாடமாக தேர்தல் தோல்வி அமைந்துள்ளது என்றார். மேலும், தங்களை பாஜகவின் "பி டீம்" என்ற எதிர்மறை பரப்புரைக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும், ஆனால் பாஜகவை தேர்தலில் மட்டுமல்ல, கொள்கை அளவிலேயும் பகுஜன் சமாஜ் எதிர்ப்பதாகவும் மாயாவதி கூறினார்.

இதனிடையே மும்பையில் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு மாயாவதியும், ஓவைசியும் உதவியதாகவும் அவர்களுக்கு பத்ம விபூஷன் போன்ற விருதுகளை வழங்கலாம் என்றார். மேலும், பஞ்சாபில் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பரப்புரை செய்தும், பாஜக மிகப்பெரிய தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது என்றும் விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com