அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாயாவதி, நிதிஷ் நேரில் விசாரிப்பு
மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மாயாவதி மற்றும் நிதிஷ் குமார் நேரில் விசாரித்தனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நேரில் விசாரித்தனர். அதேபோல், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரும் நேரில் நலம் விசாரித்தனர்.

