Headlines
Headlinespt

Headlines|மக்கள் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் முதல் மழை வெள்ளம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மக்கள் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் முதல் சூழ்ந்த மழை வெள்ளம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணியலாம். கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழை. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி .

  • தொடர் மழையால் திற்பரப்பு அருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை.

  • காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி . கபினி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், வெள்ள அபாய எச்சரிக்கை.

  • கேரளாவின் காசர்கோட்டில் பள்ளிவாசலை சூழ்ந்த மழை வெள்ளம். கர்நாடகாவின் மங்களூருவில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு.

  • தேர்தல் நேரத்தில் கட்சி தாவி விட்டு பாஜகவிற்கு திரும்புபவர்களுக்கு, முக்கியத்துவம் கிடையாது என பிகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடி எச்சரிக்கை.

  • சென்னையில் வரும் 3ஆம் தேதி முதல் மின்சார பேருந்து சேவை. முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகளின் சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

  • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு. ராஜ்யசபா சீட் தொடர்பாக இருவரும் ஆலோசனை எனத் தகவல்.

  • வேலூர் அரசு மருத்துவமனையில் செவிலியரின் அலட்சியத்தால் விபரீதம். பச்சிளம் குழந்தையின் கை விரல் துண்டான பரிதாபம்.

  • ஒடிசாவில் அரசு அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை. 2 கோடி ரூபாய் பறிமுதல்; 10 பேர் சேர்ந்து பணத்தை எண்ணும் வீடியோ வைரல்.

  • காசாவிலுள்ள ஒவ்வொருவரும் பஞ்சத்தில் சிக்கும் ஆபத்து. உலகின் மிகவும் பசிமிக்க இடமாக காசா உள்ளதாக ஐநா எச்சரிக்கை.

  • அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கான குடியேறிகள் பரோலை திரும்ப பெறும் நடவடிக்கைக்கு அனுமதி. ட்ரம்ப் நிர்வாகத்தின் செயலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம்.

  • ஐபிஎல் தொடரில் குஜராத்தை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கான 2ஆவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ். குஜராத்தின் வெற்றிக்காக போராடிய சாய் சுதர்சனின் ஆட்டம் வீண்.

  • பிரதமர் மோடியை, பாட்னா விமான நிலையத்தில் சந்தித்த சூர்யவன்சி. இளம் கிரிக்கெட் வீரரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து என பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவு.

  • ஆசிய தடகளத்தில் 10 ஆயிரம் மீட்டரைத் தொடர்ந்து, 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்ற குல்வீர் சிங். மகளிருக்கான உயரம் தாண்டுதலில் பூஜாவும், ஹெப்டத்லான் போட்டியில் நந்தினியும் தங்கம் வென்று அசத்தல் .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com