Headlines|மன்னிப்பு கேட்க மறுத்த கமல் முதல் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் வரை!
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
மண் சரிவு அபாயம் காரணமாக உதகை - கூடலூர் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை. வாகனங்களை திருப்பி அனுப்பிய காவல் துறையினர்.
நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதி.
மாநிலங்களவை எம்.பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது திமுக. திமுக ஆதரவுடன் எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2369 ரூபாயாக உயர்வு என மத்திய அரசு அறிவிப்பு.
கன்னடம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படத்தை திரையிட விடமாட்டோம் என நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை.
அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது என கன்னட மொழி தொடர்பான சர்ச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம். தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றையே பேசியதாகவும் கருத்து.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு. ஜூன் 2ஆம் தேதி தண்டனை விவரம் தெரிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்தே மாதங்களில் காவல் துறை , நீதியை பெற்றுக்கொடுத்துள்ளதாக முதல்வர் பெருமிதம். முக்கிய கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
நகைக்கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக க்ரீஸ் நாட்டு அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்த இந்திய எம்.பிக்கள். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என திமுக எம். பி கனிமொழி பேச்சு.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சொந்த மண்ணில்தான் போட்டி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
சென்னையில் கொரோனா மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு. மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணம்.
கேரளாவில் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து வெளியேறும் ரசாயனப் பொருட்கள் . குமரிக் கடல் பகுதியில் கரை ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி குத்திக்கொலை.மற்றொரு சிறுமியும்வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் இன்று நடைபெறவிருந்த பாதுகாப்பு ஒத்திகை தள்ளிவைப்பு. நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு..
மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் சந்திப்பு. 44 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக தகவல்.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு. மே 14ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் சின்வார் பலியானதாக தகவல்.
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுகள் இன்று தொடக்கம். முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை.
ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் ப்ரவீன் சித்ரவேல். மும்முறை தாண்டுதல் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தல்.