Headlines|தென்மேற்கு பருவமழை தீவிரம் முதல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வரை!
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் உதகை - கல்லட்டி சாலையில் மண் சரிவு. புத்தூர்வயல் ஆற்றில் வெள்ளம்.. மழை நீரில் மூழ்கிய பயிர்கள்.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை . நீர்வரத்து அதிகரிப்பால் 100 அடியை எட்டியது பாபநாசம் அணை.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிப்பு.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம். கோழிக்கோட்டில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி.
தென்மேற்கு பருவமழை தென்னிந்தியாவில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும், வட தமிழக மாவட்டங்களில் அதிக மழை பொழியும் என்றும் வானிலை மையம் கணிப்பு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட வழக்கு. இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்.
சென்னை அருகே பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தில் கோளாறு. அந்தரத்தில் தவித்த 36 பேர் பத்திரமாக மீட்பு.
ஆட்சியைப் பற்றி குறை கூற ஒன்றும் இல்லை என்பதால் வீம்புக்காக பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு பதில் கூறி தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
திமுக பிரமுகர் தெய்வச்செயல் மீது புகார் அளித்த மாணவியை காவல் துறை மிரட்டுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. திமுக யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது என கேள்வி.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பான கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என பிரேமலதா பதில். தேர்தல் நிலைப்பாடு குறித்து கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பதாக பேட்டி.
மாநிலங்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் வேட்பாளர்களை அதிமுக வேட்பாளர்களாக ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு.
வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்த தவெக நிர்வாகிகளை காவல் துறையினர் தாக்கியதாக விஜய் புகார். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்புவதாக காவல் துறை விளக்கம்.
குமரி மாவட்டம் காப்பிக்காடு பகுதியில் 4 வழிச்சாலை பணிகளுக்கு எதிர்ப்பு. காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் கைது.
வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் . கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
நாடு முழுவதும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை. குடியரசுத் தலைவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்ப்பு.
டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இரண்டாவது கட்டமாக நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழா. திரெளபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருதைப் பெற்றார் நடிகை ஷோபனா.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அவகாசம்.ஜூலை 31ஆம் தேதியுடன் முடியவடைய இருந்த நிலையில் காலஅவகாசம் நீட்டிப்பு.
ஐபிஎல் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு அணி. நாளை நடைபெறும் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.