Headlines
Headlinespt

Headlines|மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு முதல் தொடரும் ரெட் அலர்ட் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு முதல் தொடரும் ரெட் அலர்ட் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு தொடரும் ரெட் அலர்ட். நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.

  • நீலகிரியில் அதிகனமழையால் 43 இடங்களில் மரங்கள் சரிந்தன. 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்.

  • மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளமாக கொட்டும் மெயின் அருவி. அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை.

  • தேனி அருகே மழைநீர் வடிகால் தொட்டியில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்து இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு. வடிகால் தொட்டிக்கு சுற்றுச்சுவர் இல்லாததே விபத்துக்கு காரணம் என தகவல்.

  • தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு ஜுன் 19ஆம் தேர்தல். அன்புமணி, வைகோ உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

  • தமிழ்நாட்டில் விரைவில் கூடுதல் முதல்வர் படைப்பகங்கள் திறக்க நடவடிக்கை என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

  • அதிமுக ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய ஸ்டாலின், இப்போது வெள்ளைக்குடை பிடிக்கிறார் என கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

  • யாரும் யாருடைய வாக்கை பிரிக்க முடியாது. ஓட்டு பிரிப்பது என்பது கூரை வீட்டை பிரிப்பது போன்று அல்ல என்று சீமான் பேச்சு.

  • சென்னை வியாசர்பாடியில் குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து. வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு.

  • சென்னை அனகாபுத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு. பாதாள சாக்கடை பணியின்போது விபரீதம்.

  • சென்னை அண்ணாநகரில் இரவு நேரத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 9 பேர் கைது. பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளாகக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம்.

  • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் முகத்தை பிடித்து தள்ளிய மனைவி. சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் வீடியோ.

  • உக்ரைனை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என புடின் நினைத்தால் அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு காரணமாகி விடும். போர் நிறுத்தம் தாமதமாகி வரும் நிலையில் ரஷ்ய அதிபரை விமர்சித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

  • ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ். 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com