Headlines|கொட்டி தீர்த்த கனமழை முதல் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வரை!
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை . கூடலூர் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.
தொடர் மழையால் முழுமையாக நிரம்பியது பில்லூர் அணை. பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் அதி கனமழைக்காக ரெட் அலர்ட் எச்சரிக்கை. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
அதி கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.
அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்தே முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றச்சாட்டு. தமிழகத்திற்கான நிதி குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும், எதிர்க்கட்சியைப் போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை என முதல்வர் ஸ்டாலின் பதிலடி.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு . மோப்ப நாய் உதவியுடன் ஒரு மணி நேரம் சோதனையிட்ட வெடிகுண்டு நிபுணர்கள்.
யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான வினாவில், பெரியாரின் பெயருடன் சாதிப் பெயரும் இடம்பெற்றதால் சர்ச்சை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்.
பின்தங்கியவர்களை முன்னேற்றவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக பிரதமர் மோடி உரை. சிறப்பான நிர்வாகத்தை வழங்க பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முதல்வர்களுக்கு அறிவுறுத்தல்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து மூத்த மகன் தேஜ் பிரதாப்பை நீக்கிய லாலு பிரசாத் யாதவ். குடும்ப ரீதியாகவும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என ஆவேசம்.
ரஷ்யா, உக்ரைன் இடையே 3 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் பரிமாற்றம் . மூன்று ஆண்டுகளாகத் தொடரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டம் எனத் தகவல்.
பெருவில் களைகட்டிய கோமாளி தின கொண்டாட்டம் . தலைநகர் லீமாவில் ஏராளமானோர் கோமாளி போன்று வேடமணிந்து பேரணி.
ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி.
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் முன்னணி வீராங்கனை சபலென்கா இரண்டாவது சுற்றுக்குத் தகுதி. உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவும் முதல் சுற்றில் வெற்றி.