Headlines
Headlinespt

Headlines|மிதமான மழை முதல் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மிதமான மழை முதல் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தமிழ்நாட்டில் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள 9 ரயில் நிலையங்களை காணொளி முறையில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

  • எந்தநாளும் உரிமைக்கொடியைதான் ஏந்துவேன் என நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் பதில். வெள்ளைக்கொடிக்கு வேலை வந்துவிட்டதோ என பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில், எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் பதிவு.

  • ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம் என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி. 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து இப்போது மட்டும் முதல்வர் செல்வது ஏன் என்றும் வினா.

  • பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை. திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு .

  • துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு.

  • அரசுக்கு அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது என மூத்த வழக்கறிஞர் வில்சன் பேட்டி.

  • நகைக்கடனில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது ரிசர்வ் வங்கி. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்.

  • தஞ்சை அருகே அரசுப் பேருந்தும், டெம்போ வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து. 5 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

  • மாநிலம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவு. சிவகங்கை கல்குவாரி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததையடுத்து நடவடிக்கை.

  • கழிவுநீர் கலப்பதை தடுக்க அனகாபுத்தூரில் ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியம் . உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் என தமிழக அரசு விளக்கம்.

  • பாலியல் புகாருக்கு உள்ளான திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலுக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு. அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கணிப்பு.

  • டெல்லியில் திடீரென புழுதிப் புயலுடன் கொட்டிய கனமழை. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் பாதிப்பு.

  • டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் சேதம். நடுவானில் தத்தளித்த விமானத்தால் மரண பீதியில் அலறிய பயணிகள்..ipl

  • தென்னாப்ரிக்காவில் வெள்ளையின மக்கள் குறிவைத்து கொல்லப்படுவதாக அந்நாட்டு அதிபருடன் வாக்குவாதம் செய்த ட்ரம்ப். வெள்ளை மாளிகையில் வீடியோ ஆதாரம், பத்திரிகை செய்திகளை காட்டி குற்றச்சாட்டு.

  • தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள சுகர் பேபி பாடலின் லிரிக்கல் வெர்ஷன் வெளியானது. ஜூன் 5இல் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு.

  • ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது மும்பை இந்தியன்ஸ். டெல்லி அணியை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com