Headlines
Headlinespt

Headlines|விஜயின் முதல் செய்தியாளர் சந்திப்பு முதல் கிருஷ்ணகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, விஜயின் முதல் செய்தியாளர் சந்திப்பு முதல் கிருஷ்ணகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் தொலைபேசியில் ஆலோசனை. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதி.

  • பஹல்ஹாம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமித் ஷா உறுதி. பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும் என்றும் சூளுரை .

  • தொழிலாளர் வளர்ச்சிக்கு இலக்கு வைத்து திமுக அரசு செயல்படுகிறது. மே தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு.

  • இன்று மாலை கூடுகிறது அதிமுக செயற்குழு. பாஜக உடனான கூட்டணி அறிவிப்புக்கு பின் முதல்முறையாக கூடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு.

  • மதுரையை தொடர்ந்து கொடக்கானலிலும் விஜயை வரவேற்க குவிந்த தவெக தொண்டர்கள். தன்னை யாரும் பின்தொடர வேண்டாம் என்ற வேண்டுகோளை மீறி விஜயின் காரை சூழ்ந்துகொண்டு கோஷம்.

  • சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தோஷ் என்ற இளைஞர் கைது. தேனி சைபர் க்ரைம் காவல் துறை நடவடிக்கை.

  • மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு; எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி பேசும்.கிரேஸி மோகன் புத்தக வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு.

  • கிருஷ்ணகிரியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் மரங்கள் முறிந்து விழுந்து சாலையோர கடைகள், வாகனங்கள் சேதம்.

  • மின்கம்பங்களும் முறிந்ததால் மின்விநியோகம் பாதிப்பு; சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.

  • பெங்களூருவில் பலத்த காற்றுடன் திடீரென கொட்டிய கனமழை. வீடு திரும்ப முடியாமல் பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்த மக்கள்.

  • சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல்..

  • மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு, கர்நாடக அரசு மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதிலடி.

  • "சட்டவிரோத கட்டுமான வழக்குகளில் கடுமையான அணுகுமுறை தேவை”. நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்..

  • உலகின் வயதான பெண்மணியான பிரேசிலின் இனா லூகாஸ் காலமானார்.116ஆவது வயதில் உயிர் பிரிந்தது.

  • ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை 117 ரன்களில் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ். 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

  • "பத்து தல" படத்தில் இடம்பெற்ற “நீ சிங்கம் தான்” பாடலே தனக்கு மிகவும் பிடித்த பாடல் எனக் கூறிய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. பெங்களூரு அணி வெளியிட்ட வீடியோவை டேக் செய்து நடிகர் சிம்பு நெகிழ்ச்சி பதிவு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com