Headlines|பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை முதல் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு வரை!
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை. மதுரை யானைக்கல் தரைப்பாலம் இணைப்புச் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி.
தமிழ்நாட்டில் நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ் கலாசாரத்தைப் பாதுகாப்பதாக கூறும் அரசியல் கட்சிகள் அதற்காக என்ன செய்தன என ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி. கலாசாரத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது என்றும் தஞ்சை நிகழ்ச்சியில் பரபரப்பு பேச்சு.
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என த.வெ.க. தலைவர் விஜய் கூறினாரா? என தமிழிசை கேள்வி. யார்யாரோ பேசுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது எனவும் பேட்டி.
“பாஜக, திமுகவுடன் என்றும் கூட்டணி இல்லை என விஜய் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்” என தமிழிசை செளந்தரராஜன் கருத்துக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் பதில்
முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு கேரள அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு.
இந்தியாவில் அரசமைப்பு சட்டமே உச்சபட்ச அதிகாரமிக்கது; நீதித்துறையோ, நிர்வாகத்துறையோ அல்ல என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான புதிய காணொளியை வெளியிட்ட ராணுவம். இந்திய படைகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்ட விதம் குறித்து விவரிக்கும் காட்சி.
கேரளாவின் கோழிக்கோட்டில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல். 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக தகவல்.
போப்பாக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார் போப் பதினான்காம் லியோ. அமைதி, அன்பை வெளிப்படுத்த உலகத் தலைவர்களுக்கு அழைப்பு.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு. மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்து சிகிச்சை பெறுவதாக தகவல்.
டெல்லி அணியை வீழ்த்தி ஐபிஎல் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ். தமிழக வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசி அபாரம்.
"மதுரை மக்களின் பாசம் என்றைக்கும் மாறாது” என திருமங்கலத்தில் ரசிகர் மன்றச் செயலாளர் திருமணத்தில் பங்கேற்ற நடிகர் விஷால் நெகிழ்ச்சி.