Headlines
Headlinespt

Headlines|முடிவுக்கு வரும் கோடைகாலம் முதல் 9 நாட்களுக்கு பிறகு தொடங்கும் ஐபிஎல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, முடிவுக்கு வரும் கோடைகாலம் முதல் 9 நாட்களுக்கு பிறகு தொடங்கும் ஐபிஎஸ் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தமிழகத்தில் 20ஆம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட குறையும் என்றும் வானிலை மையம் கணிப்பு.

  • கோடைக்காலம் முடிவுக்கு வருவதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் கணிப்பு.

  • மதுரையில் பல பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை. பேனர்கள், மரங்கள் சாலைகளில் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.

  • தஞ்சை,புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழை. கோடையின் தகிப்பை தணித்ததால் மக்கள் நிம்மதி.

  • டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத் துறை இரவிலும் நீடித்த விசாரணை. வீட்டில் கிழிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட வாட்ஸ் அப் சாட் நகல்கள், ஆவணங்கள் தொடர்பாக கேள்வி.

  • டாஸ்மாக் இயக்குநரிடம் வாட்ஸ் அப்பில் பேசியவர் உதயநிதியின் நண்பரா என அதிமுக கேள்வி. யார் அந்த ரத்தீஷ் என கேள்வி எழுப்பி, எக்ஸ் தளத்தில் பதிவு.

  • “ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே என்.டி.ஏ. கூட்டணியில் உள்ளனர்” என பாரதிய ஜனதா மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.

  • 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் கூட்டணி உண்டு என ராமதாஸ் விளக்கம். தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் பாமக வெற்றிபெற வேண்டும் எனவும் பேச்சு.

  • இம்மாத இறுதிக்குள் மாவட்ட, ஒன்றிய அளவிலான சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் ஆனந்த்துக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தல்.

  • பொது சின்னம் கோரி நவம்பர் 11ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் . தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

  • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை இந்தியா முழுமையாக அழித்துவிடும் என ராஜ்நாத் சிங் சூளுரை. ஆபரேஷன் சிந்தூரில் இதுவரை பார்த்தது டிரெய்லர் மட்டுமே என புஜ் விமானப்படைத்தளத்தில் பேச்சு.

  • இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு. காஷ்மீர் விவகாரம் குறித்து பேச வேண்டும் என நிபந்தனை விதிப்பு.

  • ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. 2 மணி நேரம் நீடித்த பேச்சில் ஆயிரம் கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள ஒப்புதல்.

  • சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தகவல். உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் கவலை.

  • இந்தியா, பாகிஸ்தான் மோதலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம். 9 நாள் இடைவெளிக்கு பிறகு தொடரும் தொடரில் கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதல்.

  • ஈட்டி எறிதலில் 90 மீட்டர் தொலைவை தாண்டி வீசிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா. கத்தாரில் நடைபெறும் டைமண்ட் லீக் போட்டியில் 2ஆம் இடம் வகிக்கும் இந்திய வீரர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com