Headlines|வெளியாகும் பொதுத்தேர்வு முடிவுகள் முதல் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு வரை!
காலக்கெடு விதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டார் குடியரசுத் தலைவர். அரசமைப்பு நிலைப்பாட்டை தகர்க்கும் முயற்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. அரசு இணையதளங்கள் மூலம் மதிப்பெண்களை அறிந்து கொள்ள ஏற்பாடு.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு ஆட்சேபனைக்குரிய விதிகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் விருப்பம். பாகிஸ்தானுடனான உறவுகள் மற்றும் பேச்சுகள் கட்டாயம் இரு தரப்பானவை மட்டுமே என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்.
இந்தியாவில் விமான சேவைகளை வழங்கும் துருக்கி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்த மத்திய அரசு. புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்த ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம்.
ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ தேசிய கொடியை அவமதித்துவிட்டதாக சர்ச்சை. பேரணியின்போது தேசியக்கொடியால் முகத்தை துடைத்ததாக குற்றச்சாட்டு.
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஜெகன்னாதனுக்கு ஆளுநர் பிரிவு உபசார விழா நடத்துவதா? வேந்தர் பதவிக்கு நேர்ந்த அவமானம் என அமைச்சர் கோவி. செழியன் கண்டனம்.
புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம், ஒருவர் உயிரிழப்பு. 50க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூரில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
வேலூர் குடியாத்தத்தில் சிறப்பாக நடைபெற்ற சிரசு திருவிழா. கவுண்டன்ய ஆற்றங்கரையில் இரவில் நடைபெற்ற வான வேடிக்கை.
திருவண்ணாமலை ரயில் நிலையம் மூவர்ண விளக்குகளால் பிரம்மாண்டமாக அலங்கரிப்பு. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் நடவடிக்கை.
அடுத்த 2 வாரங்களில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு. வர்த்தக போர் முடிவுக்கு வந்திருப்பதால் சரியும் என வணிகர்கள் தகவல்.
உலக அழகி போட்டி பங்கேற்பாளர்களின் பாதங்களை கழுவி விட்ட பெண்கள். காலனித்துவத்தின் மிச்சம் என விமர்சனம்.
மும்பையில் மாநகராட்சி நகரமைப்பு துணை இயக்குநர் மீதான பண மோசடி புகார். அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 32 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்.
விறுவிறுப்பான கட்டத்தில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி. காலிறுதியில் முன்னணி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சித் தோல்வி.
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை வைத்து ரமணா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் என படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு.