Headlines|சூறைக்காற்றுடன் கனமழை முதல் பாகிஸ்தானிலிருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்த பலுசிஸ்தான் வரை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. ராமநாதபுரத்தில் 20 கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம். ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பில் திமுகவின் பங்கு என்ன? என முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.
சித்திரை திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவிலும் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையை தீர்க்க நல்ல இரவு விருந்துக்கு கூட ஏற்பாடு செய்யலாம் என சவுதி அரேபியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு.
மூவர்ணக் கொடி மின் விளக்கால் ஜொலித்த பாம்பன் பாலம். பரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட ஒளிரவிடப்பட்ட பாலத்தை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்.
துருக்கி பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்த டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகம். தேசிய பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி முடிவு.
இந்தோ-மியன்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிக அளவில் ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவம் தகவல்.
அடுத்தாண்டு மார்ச்-க்குள் இந்தியா நக்சல்கள் அற்ற நாடாக மாறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி.
கர்னல் சோபியா குரேஷி குறித்து மதவாத மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது நீதிமன்ற உத்தரவையடுத்து எப்ஐஆர் பதிவு செய்தது காவல் துறை.
அகமதாபாத்தில் வளர்ப்பு நாய் கடித்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு. உரிமையாளரின் கட்டுப்பாட்டையும் மீறி கடித்து கொன்றது.
கோவையில் தப்பிக்க முயன்ற இளைஞர் மீது போலீசார் சுட்டதால் பரபரப்பு. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல்.
பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சிப் படை அறிவிப்பு. பலுசிஸ்தான் தூதரகத்தை டெல்லியில் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை.
போரால் தீர்வு ஏற்படாது என போப் பதினான்காம் லியோ கருத்து. மனிதர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்றும் அறிவுரை.
முடிவுக்கு வருமா ரஷ்யா, உக்ரைன் இடையிலான 3 ஆண்டு போர்? இரு நாட்டு தலைவர்களும் துருக்கியில் இன்று நேரடி பேச்சுவார்த்தை.
இலங்கையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து. சாலையில் கொட்டிய எரிபொருளை, போட்டி போட்டு கேன்களில் எடுத்துச் சென்ற மக்கள்.
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினென்ட் கர்னலாக நியமனம். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருக்கு கிடைத்தது அங்கீகாரம்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய வீரர்களை அணிகளில் சேர்க்க பிசிசிஐ அனுமதி. வெளிநாட்டு வீரர்கள் பலர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் மாற்று ஏற்பாடு.