Headlines|பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்தியா முதல் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வரை!
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான காணொளியை வெளியிட்டு இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் விளக்கம். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள், விமானப் படை தளங்கள் மீதான தாக்குதல் வீடியோ வெளியீடு.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை தெரிவித்துள்ளோம். பாகிஸ்தான் மக்களுக்கு பாதிப்பின்றி பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் முப்படை அதிகாரிகள் விளக்கம்.
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என இந்திய பாதுகாப்பு படைகள் எச்சரிக்கை.
பாகிஸ்தான் தாக்கினால் திரும்ப தாக்க எல்லையில் தயாராக உள்ள இந்தியப் படைகள். ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாகவும் இந்திய விமானப் படை பதிவு.
காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் பிரதமர் மோடி கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்.
5 நாட்களாக பயணமாக இன்று உதகை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 27வது மலர்க் கண்காட்சியை வரும் 15ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
விழுப்புரத்தில் நடிகர் விஷால் திடீரென மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் நலமுடன் சென்னை திரும்பினார்.
கூவாகத்தில் களைகட்டிய திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி. மிஸ் கூவாகமாக தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி தேர்வு.
கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன், யாரும் கவலைப்பட வேண்டாம் என சித்திரை முழு நிலவு மாநாட்டில் ராமதாஸ் பேச்சு. உழைக்காமல் கட்சியில் இருப்பவர்கள் நீக்கப்படுவர் என்றும் எச்சரிக்கை.
சேலத்தில் வீட்டில் இருந்த முதிய தம்பதி படுகொலை. நகைக்காக கொலையா என்ற கோணத்தில் காவல் துறை விசாரரணை.
கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிப்பு.
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள சண்டை நிறுத்தத்திற்கு போப் 14ஆம் லியோ வரவேற்பு. இருநாடுகளும் அமைதியை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன். இறுதிப் போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தல்.