அரசுக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் கண்டனம்

அரசுக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் கண்டனம்

அரசுக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் கண்டனம்
Published on

மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை டெல்லி அரசு ரத்து செய்ததற்கு, தனியார் மருத்துவமனைகள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

டெல்லியில் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் 6 மாத கர்ப்பிணிக்கு கடந்த 30-ம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால், இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு சிசு, உயிருடன் இருப்பது தெரிந்தது. வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிசு, சிகிச்சை பலனின்றி கடந்த 6-ம் தேதி இறந்தது.

மருத்துவமனையின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து, உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக அறிவித்த மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை டெல்லி அரசு ரத்து செய்தது.

டெல்லி அரசின் உத்தரவுக்கு தனியார் மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகள் மற்றும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவை அறிவித்துள்ளன. அரசு மருத்துவமனைகளின் சேவை படுபாதாளத்தில் உள்ளதாகவும் தனியார் மருத்துவமனைகள் குற்றம்சாட்டியுள்ளன.

தனியார் மருத்துவமனை மருத்துவர் ஆஷுதோஸ் ரகுவன்ஷி கூறுகையில், இது ஒரு தவறான நடவடிக்கை. மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக உரிமத்தையே ரத்து செய்துள்ளார்கள். இதனால் அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். தனியார் மருத்துவமனைகள் உலக தரத்தில் சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால் பொது மருத்துவமனைகள் இருப்பதில்லை?என்று கேள்வி எழுப்பினார்.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் சேர்மன் புபின் தரா சிங், மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்தது தீர்வு அல்ல, வேறு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றார்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் கூறுகையில், தனியார் மருத்துவமனைகள் பொருத்தவரை எங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் குற்றச் செயல்களை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com