இந்தியா
அயோத்தி வழக்கின் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
அயோத்தி வழக்கின் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
அயோத்தி வழக்கு தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மூல மனுதாரரின் மகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அயோத்தியில் மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மூல மனுதாரர் சித்திக்கின் மகன் மவுலானா சையது அஷாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 217 பக்கங்கள் கொண்ட சீராய்வு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.