மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளியில் தவறிழைத்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உடல் சார்ந்த தண்டனை வழங்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் அசோக் நகரில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றில் சில மாணவர்கள் தவறிழைத்ததாக ஆசிரியர் தண்டனை வழங்கியுள்ளார். அதற்காக சில மாணவர்கள் குனிந்தவாறு, தங்களது கைகளை இடுப்பின் கீழே கோர்த்தபடி நடந்து செல்லுமாறு கட்டளை விடுத்துள்ளார். இதனால் மிகவும் சிரமப்பட்டு மாணவர்கள் நடந்து செல்லும் அந்த காட்சிகள் வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. எதற்காக இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.