‘கணித பாடம் ஒரு கலை’ இந்திய கணிதவியலாளர் பானு பிரகாஷ்

‘கணித பாடம் ஒரு கலை’ இந்திய கணிதவியலாளர் பானு பிரகாஷ்
‘கணித பாடம் ஒரு கலை’ இந்திய கணிதவியலாளர் பானு பிரகாஷ்

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் மனக் கணக்கீட்டு உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் நீலகண்ட பானு பிரகாஷ் ‘கணித பாடம் ஒரு கலை’ என தெரிவித்துள்ளார். 

அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார்..

“ எப்படி தடகள விளையாட்டுகளில் ஸ்பிரிண்டிங் ஒரு வகையான விளையாட்டு என்பது உங்களுக்குத் தெரியும். மனக் கணக்கீடு நம் மூளைக்குள் விளையாடப்படும் ஸ்பிரிண்டிங். 

முடிந்தவரை விரைவாக கணக்கிட்டு சொல்ல வேண்டும். விளையாட்டை போலவே இதிலும் குறிப்பிட்ட மெத்தடாலஜி கடைபிடிக்கப்படுகிறது. 

எல்லோருரையும் போல நானும் சாதாரணமானவன். அது தான் நிஜம். எல்லோராலும் வேகமாக கணக்கிட முடியும். இது நாடு, உலகம் என அனைவருக்கும் பொருந்தும். 

பள்ளி பாடத்திட்டத்திலேயே கணக்கு பாடத்தை ஒருவித பய உணர்வோடு நெருங்குவதால் தான் கணிதம்என்றாலே ஓட்டம் எடுக்க காரணம். 

என் பயணத்தில் நான் கணிதத்தில் சிறந்தவனாகவே இருந்தேன், இருக்கிறேன்.

கணிதத்தை நாம் கலை வடிவமாக அணுக வேண்டும். அந்த பார்வையினால் தான் நான் இன்று எனது ஆகச்சிறந்த சாதனையை படைத்துள்ளேன். இது சமூகத்திற்காக என்னால் முடிந்த பங்களிப்பை கொடுக்கக்கூடிய தொடக்கமாக பார்க்கிறேன்” என அவர்  தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com