நாகாலாந்து - மணிப்பூர் எல்லையின் ‘டுகோ' பள்ளத்தாக்கில் பெரும் காட்டுத்தீ!

நாகாலாந்து - மணிப்பூர் எல்லையின் ‘டுகோ' பள்ளத்தாக்கில் பெரும் காட்டுத்தீ!
நாகாலாந்து - மணிப்பூர் எல்லையின் ‘டுகோ' பள்ளத்தாக்கில் பெரும் காட்டுத்தீ!

நாகாலாந்து மற்றும் மணிப்பூரின் எல்லையில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற டுகோ பள்ளத்தாக்கின் ஒரு பெரிய பகுதி கடந்த சில நாட்களாக பெரும் காட்டுத்தீயில் சிக்கியுள்ளது.

நாகாலாந்து மற்றும் மணிப்பூரின் எல்லையில் உள்ள டுகோ பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ படிப்படியாக மணிப்பூர் நோக்கி, மவுண்ட் ஐசோ இருக்கும் திசையில் பரவுகிறது. எனவே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவியை நாடியுள்ளது. மேலும் காட்டுத்தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு உதவுமாறு இராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளையும் அரசு கோரியுள்ளது.

சேனாபதி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தின் தகவல்களின் படி, மணிப்பூர் எல்லையின் நாகாலாந்து பக்கத்தில் இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. நாகாலாந்து எல்லைக்கு அருகே வசிக்கும் கிராமவாசிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, டிசம்பர் 28 முதல் மறுபுறம் காட்டுத்தீ பரவி, வியாழக்கிழமை காலை மணிப்பூர் எல்லையை அடைந்தது என தெரிவித்தனர். சுமார் 130 கிராமவாசிகள் அடங்கிய குழு, சில வன அதிகாரிகளுடன், தீயைக் கட்டுப்படுத்தவும், மணிப்பூர் பக்கம் தீ பரவாமல் இருக்கவும் அனுப்பப்பட்டது. இருப்பினும், அதிக வேகம் கொண்ட காற்று மற்றும் செங்குத்தான நிலப்பரப்பு காரணமாக தீயை கைமுறையாகக் கட்டுப்படுத்தும் ஆரம்ப முயற்சி வெற்றிபெறவில்லை என்று வனத்துறை அதிகாரி கூறினார்.

நிலைமை ஆபத்தான நிலையில், மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரென் சிங், தலைமைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் குமார், டிஜிபி எல்.எம். கவுட் மற்றும் சேனாபதி டி.சி. கிரங்குமார் ஆகியோர் டுகோ பள்ளத்தாக்கில் வான்வழி ஆய்வினை இன்று காலை 11:30 மணியளவில் தொடங்கி மதியம் 1:30 மணி வரை தொடர்ந்தனர்.

மவுண்ட் ஐசோ மணிப்பூரில் மிக உயர்ந்த சிகரம். அதுபோலவே ‘டுகோ பள்ளத்தாக்கு’ அதன் ரம்யமான பச்சைபசேல் அழகுக்காக அறியப்படுகிறது, இதனால் இப்பள்ளத்தாக்கு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த பள்ளத்தாக்கில் உலகின் வேறு எங்கும் காணப்படாத ‘டுகோ லில்லி’களுக்கு சொந்தமானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com