Mass Voter Cleanup: 10% Declared Bogus, 5.2 Cr Deleted
SIRPt web

12 மாநிலங்களில் நடந்த எஸ்.ஐ.ஆர்.. 5.2 கோடி வாக்காளர்கள் நீக்கம்.!

இந்தியாவின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில், கிட்டத்தட்ட 10% வாக்காளர்கள் செல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Published on

இந்தியா தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணிகளை கடந்த 2025ஆம் ஆண்டு தொடங்கியது. முதற்கட்டமாக, பிகாரில் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொண்ட போது, 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்களர்களை நீக்கியிருந்தது தேர்தல் ஆணையம். இதனை வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையில் தான், இந்தியா தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்களர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

people waiting to cast vote
people waiting to cast vote Pt web

இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக முதற்கட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 97 லட்சம், மேற்கு வங்கத்தில் 91 லட்சம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து 7.2 கோடி வாக்களர்கள் நீக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், தகுதியுள்ள வாக்களர்கள் தேர்தல் ஆணையத்தின் முகாம்களில் இணைத்துக் கொள்ளலாம எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முகாம்களையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, புதிய பதிவுகள் (படிவம் 6) மற்றும் முகவரி புதுப்பிப்புகள் (படிவம் 8) மூலம் கிட்டத்தட்ட 2 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால், நீக்கங்கள் ஓரளவு ஈடுசெய்யப்பட்டன. இதன்பிறகு, 12 மாநிலங்களில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 45.8 கோடியாக உள்ளது.ஆரம்பத்தில் இருந்த சுமார் 51 கோடி வாக்காளர்களில் 5.2 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்தம் இருந்த வாக்களர்களில் 10 சதவீதம் ஆகும்

Mass Voter Cleanup: 10% Declared Bogus, 5.2 Cr Deleted
”வாகனத்தில் அமர்ந்து கை காட்டுவது அரசியல் அல்ல” - விஜய் குறித்து அண்ணாமலை விமர்சனம்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com