’மக்கள் இயக்கங்கள் மூலம் I-N-D-I-A கூட்டணியை வலுப்படுத்துவோம்’- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்திட மக்கள் இயக்கங்கள் மூலமாக கணிசமான பிரிவு மக்களை ஈர்த்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
I-N-D-I-A கூட்டணி, பிரகாஷ் காரத்
I-N-D-I-A கூட்டணி, பிரகாஷ் காரத்கோப்பு படம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ எனப்படும் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில் செப்டம்பர் 16-17 தேதிகளில் நடைபெற்றது. முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்த தலைமைக் குழு கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்திட மக்கள் இயக்கங்கள் மூலமாக கணிசமான பிரிவு மக்களை ஈர்த்திட வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் இந்த கூட்டம் முடிந்தபின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருந்தது. அதில் ’இந்தியா’ கூட்டணி குறித்து பேசுகையில், “இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தையும், அரசமைப்புச்சட்டத்தையும், ஜனநாயகத்தையும், மக்களின் அடிப்படை உரிமைகளை யும், குடிமை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு, இந்தியா கூட்டணியை மேலும் ஒருமுகப்படுத்தி, விரிவுபடுத்திடுவதற்கான வேலை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தீர்மானித்திருக்கிறது.

பாஜக ஒன்றிய அரசாங்கத்தை யும், பல்வேறு மாநில அரசாங்கங்களையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவது அவசியமாகும். இதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தீர்மானித்திருக்கிறது. வரவிருக்கும் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிப்பதை உத்தரவாதப்படுத்திட, மக்களை அணிதிரட்டுவதற்காக, நாடு முழுவதும் தொடர்ந்து பொதுக் கூட்டங்களை நடத்திட வேண்டும் என்று ‘இந்தியா’ அணி சார்பாக பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பையில் நடை பெற்ற மூன்று கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

‘இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இதற்கான முயற்சிகளில் மக்கள் இயக்கங்கள் மூலமாக கணிசமான பிரிவு மக்களை ஈர்த்திட வேண்டும். இது தொடர்பாக அனைத்து முடிவுகளும் இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களால் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எந்தவொரு அமைப்புசார் கட்டமைப்பும் இத்த கைய முடிவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்திடக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com