விரைவில் ரயில் நிலையங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ரயில்வேத்துறை ஆலோசித்து வருகிறது.
ரயில் நிலையங்களில் பெரிதும் பயன்படுத்தப்படாத பகுதிகளை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்ட ரயில்வே துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மக்களவையில் அமைச்சர் அளித்த பதிலில் இத்தகைய திட்டமிருப்பது வெளி வந்துள்ளது. வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை இந்த திட்டத்தை ஆலோசித்து வருகிறது.
முன்னதாக, தென்னக ரெயில்வேயில் சென்னை சென்டிரல் மற்றும் கோழிக்கோடு ரெயில் நிலையங்கள் 45 வருடங்களுக்கு தனியாருக்கு ரூ.350 கோடிக்கு ஏலம் விடுவதற்கு ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.